rtjy 6 scaled
இலங்கைசெய்திகள்

யாழ்.மத்திய பேருந்து நிலையம் புதிய மைல் கல்

Share

யாழ்.மத்திய பேருந்து நிலையம் புதிய மைல் கல்

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் இன்று (01.09.2023) முதல் 24 மணி நேர சேவையை வழங்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய பிராந்தியத்தின் செயலாற்று முகாமையாளர் லம்பேட்ட தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், கடந்த யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சரும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவிடம் 24 மணிநேர சேவையை ஏற்படுத்தவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறு கோரிக்கைக்கு முன்வைக்கப்பட்டது.

அதற்கு அமைவாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினரது கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு சென்றதன் அடிப்படையில் குறித்த நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் பயணிகள் போக்குவரத்து சேவையில் இன்றுமுதல் (01.09.2023) யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் புதிய மைல் கல்லில் அடியெடுத்து வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே கொழும்பு உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்தை யாழ் மாவட்டத்தில் இருந்து மையப்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை தமது சேவைகளை முன்னெடுத்து வருகின்றது.

அத்துடன் காலாகாலமாக பகல் வேளைகளிலும் இரவில் ஆகக் கூடுதலாக 10 மணி வரையிலான காலப்பகுதிக்கான அட்டவணை நிரலின் அடிப்படையில் தமது சேவையை மேற்கொண்டு வந்த யாழ். மத்திய பேருந்து நிலையம் இன்றுமுதல் தனது சேவையை 24 மணிநேரமும் மேற்கொள்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

குறிப்பாக நேரக் கணிப்பாளர்கள் மற்றும் ஆளணிகள் குறித்த சேவைக்காக நியமிக்கப்பட்டு இன்று (01.09.2023) ஆம் திகதி முதல் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் தூர இடங்களில் இருந்து வரும் பயணிகள் இதுவரை காலமும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுவந்த நிலையில் அதற்கான தீர்வு தற்போது கிடைக்கப் பெற்றுள்ளதுடன் தமது பயணங்களை இலகுவாகவும் தடைகளின்றியும் மேற்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
02 15
செய்திகள்உலகம்

எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த மேலதிக கப்பல்கள் வருகை: பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேச எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு,...

01 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் இன்று சில பகுதிகளில் மழை மற்றும் பனிமூட்டமான வானிலை!

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இன்றைய வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்குப்...

29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....