20 1
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி செயலக வாகனங்கள் ஏலத்தில் விற்பனை

Share

ஜனாதிபதி செயலக வாகனங்கள் ஏலத்தில் விற்பனை

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 14 சொகுசு வாகனங்கள், 6 பழைய வாகனங்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் ஆகியன ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.

அரச செலவுகளை குறைக்கும் மற்றும் நிதி பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கில், இந்த வாகனங்களை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டது.

ஏலத்தில் விற்பனையாகிய வாகனங்கள் விற்பனையாகிய வாகனங்கள்:

• 9 டிஃபெண்டர் ஜீப் ரகங்கள் • 1 வோல்வோ ஜீப் • 1 கிரைஸ்லர் மோட்டார் கார் • 1 மகேந்திரா போலேரோ • 1 ரோசா பஸ் • 1 டிஸ்கவரி • 1 டொயோட்டா மோட்டார் கார்

இதேவேளை, ஏலத்தில் விற்பனை செய்யப்படாத மற்ற வாகனங்களுக்கான ஏலம் விரைவில் நடத்தப்படும்.

இவை ஜனாதிபதி செயலக அதிகாரிகள் பயன்படுத்திய வாகனங்கள் அல்ல, மாறாக முன்னாள் ஜனாதிபதி தனது பதவிக்காலத்தில் அமைச்சரவையின் 41(1) பிரிவின் கீழ் நியமித்த ஆலோசகர்கள் மற்றும் அதிகாரிகள் பயன்படுத்திய வாகனங்கள் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மொத்தம் 199 வர்த்தகர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...