யாழில் கைதான 22 இந்திய மீனவர்கள் விடுதலை!

Screenshot 2022 03 23 12 42 09 24

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு இழுவைப் படகுகளுடன் கைதான 22 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர்கள், ஊற்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டனர்.

இதன்போது நீரியல் வளத்துறை அதிகாரிகளால் சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

01) இலங்கை எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டமை.

02) நீரியல் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதிப்பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்டமை. கைதுசெய்யும் வேளையிலும் வலைகளைத் தொடக்கறுத்து வைக்காமை.

03) தடைசெய்யப்பட்ட இழுவைமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டமை.

– ஆகிய 3 குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வழக்கை விசாரித்த நீதிவான் மூன்று குற்றச்சாட்டுக்களுக்கும் தலா ஆறு மாதம் சதாரண சிறைத் தண்டணையை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்து நிபந்தனையின் அடிப்படையில் 22 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

#SriLankaNews

Exit mobile version