நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல் உட்பட அரசமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் உள்ளடங்கிய 21 ஆவது திருத்தச்சட்டமூலம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் குறித்த சட்டமூலம் சபாநாயகரிடம் இன்று கையளிக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். 21 தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
அதன்பின்னரே சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
#SriLankaNews

