புதிய அமைச்சரவை நியமனத்துக்குப் பின்னர் முதன் முறையாக அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன்போது, 20ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கி நிறைவேற்று அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் தீர்மானத்தைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ச சமர்ப்பித்தார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை இந்த யோசனைக்கு உடன்படவில்லை.
இதன்படி, 19ஆவது திருத்தச் சட்டம் போன்று 20ஆவது திருத்தச் சட்டத்தில் சாதகமான விடயங்களும் காணப்படுவதால், அவை இரண்டிலும் உள்ள சாதகமான விடயங்களைக் கொண்டு 21ஆவது திருத்தச் சட்டத்தை முன்வைக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
அதற்காக அமைச்சர்கள் அடங்கிய உப குழுவொன்றை ஜனாதிபதி நியமித்தார்.
அமைச்சர்களான அலி சப்ரி, ஜீ.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்தன மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோரை உப குழுவில் இணைத்துக்கொள்ள ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த உப குழுவால் தயாரிக்கப்படும் வரைபு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் தெரிவுக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.
#SriLankaNews
Leave a comment