ஊட்டச்சத்து குறைபாட்டுடன் 21,000 சிறுவர்கள்!

image f1e6801461

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் 21,000 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கை 40,000 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற உணவு விநியோகம் மற்றும் உணவு பாதுகாப்பின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை அதிகரிக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version