21ஐ விரைவில் நிறைவேற்றுங்கள்! – கட்சித் தலைவர்கள் வலியுறுத்து

IMG 20220527 WA0035

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டம் வெகுவிரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

21ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான கட்சித் தலைவர்கள் கூட்டம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிரதமர் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது 21 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின், யோசனைகள் பெறப்பட்டன.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் கூடிய விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று பொதுவான ஒருமித்த கருத்து இதன்போது எட்டப்பட்டது.

இன்றைய கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கலந்து கொள்ள முடியாத காரணத்தினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் வருகையுடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (3) இறுதிக் கூட்டமொன்றை நடாத்தி வரைபை பூர்த்தி செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.

இந்த வாரத்தில் ஏதேனும் ஒரு தரப்பினர் மேலதிக விளக்கத்தைப் பெற விரும்பினால் நீதி அமைச்சரிடம் அதனைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் பிரதமர் அறிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version