6 4
இலங்கைசெய்திகள்

நாட்டில் 68 பேருக்கு எதிராக பெறப்பட்டுள்ள சர்வதேச சிவப்பு எச்சரிக்கை!

Share

வெளிநாட்டில் தலைமறைவாகி நாட்டில் திட்டமிட்ட குற்றச் செயல்களை ஒழுங்குபடுத்தியவர்களுக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வெளிநாட்டில் தலைமறைவாகி நாட்டில் திட்டமிட்ட குற்றச் செயல்களை ஒழுங்குபடுத்தும் 68 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,” கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) துபாயில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் எமக்கு அறிவித்துள்ளனர்.

எனவே குறித்த சந்தேக நபர்களை நாட்டுக்கு அழைத்து வந்து அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளோம். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 11 துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இதற்கமைய திட்டமிட்டக் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 5 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன்போது 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

அதேபோன்று இதர காரணங்களால் மேலும் 6 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

எவ்வாறாயினும் இந்தத் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்ய பொலிஸார் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதேவேளை மன்னார் மேல் நீதிமன்றத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 20 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது ஒரு கைத்துப்பாக்கி, 3 ரி-56 ரக துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் அண்மையில் கல்கிசை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியையும் மீட்கப்பட்டிருந்தது.” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
11 15
இலங்கைசெய்திகள்

செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்ற விதம் தொடர்பில்...

10 16
இலங்கைசெய்திகள்

ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஒன்லைன் கெசினோ சூதாட்டத்தில் ஈடுபடுவதால், அதிகாரிகள் வரி விதிப்பதும் வசூலிப்பதும்...

9 14
இலங்கைசெய்திகள்

பொன்சேகாவின் கடும் சொற்போர்: பதிலளிக்க மொட்டுக் கட்சி மறுப்பு!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவிக்கும் கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டியதில்லை. அவர் யாரென்பது மக்களுக்குத்...

8 15
இலங்கைசெய்திகள்

அதிரடியாக கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்

எந்த நேரத்திலும் தான் கைது செய்யப்படலாம் என்பதை அறிந்திருந்ததாக, குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என கைது...