இலங்கை
மகிந்தவிற்கு கிடைத்திருக்கும் நோபல் பரிசு : காரணத்தை கூறும் நாமல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) விடுதலைப் புலிகளுடன்(ltte) புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தால் அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார் என சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP)நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (namal rajapaksa)தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை அவர் இன்றையதினம்(28) ஊடகங்களுக்கு தெரிவித்ததுடன் அவர் (மகிந்த ராஜபக்ச) செய்ய வேண்டியதைச் செய்ததாகவும் குறிப்பிட்டார்.
“விடுதலைப் புலிகளை நசுக்கியதற்காக நாமும் எங்கள் பரம்பரையும் கூட கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்ற உண்மையை நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே அறிந்திருந்தோம்” என்று நாமல் தெரிவித்தார்.
எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் நாங்கள் எமது அரசியலைத் தொடர்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை ரக்பி அபிவிருத்திக்காக இந்திய நிறுவனமொன்று வழங்கிய ரூபா 70 மில்லியனை முறைகேடாக பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை அடுத்து, நாமல் எம்.பிக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.