12 19
இலங்கைசெய்திகள்

இந்தியா பறந்த தமிழரசுக் கட்சியினர் : இடம்பெற்ற முக்கிய சந்திப்பு

Share

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் (Shanakiyan R) மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) ஆகியோர் இந்திய நாடாளுமன்றின் திராவிட முன்னேற்றக் கழக சார்பான தலைவர் கனிமொழியை சந்தித்துள்ளனர்.

இந்தியா (India) – தமிழ் நாட்டு அரசின் அழைப்பின் பேரில் இந்த சந்திப்பு சென்னையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, ஈழத் தமிழ் மக்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகள் சம்பந்தமாகவும் மத்திய அரசில் தமிழ் நாட்டின் குரலை எமக்காக தொடர்ந்து எழுப்புவது சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை சென்னை – நந்தம்பாக்கத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள அயலகத் தமிழர் தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் பொருட்டு இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சீறிதரன் நேற்று இந்திய சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...