9 6
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தின் புதிய அணுகுமுறை குறித்து ஐக்கிய மக்கள் சக்தி விசனம்

Share

அரசாங்கத்தின் புதிய அணுகுமுறை மிகவும் கவலைக்குரியதாகவுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று(04) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,”மக்களுக்கு விஷத்தை வழங்கியாவது வருமானத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பது தான் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கையா?

சட்ட விரோத மதுபானத்துக்கு பதிலாக குறைந்த விலையில் மதுபானத்தை தயாரிக்கப் போவதாக அமைச்சரொருவர் தெரிவித்துள்ளமை எந்தவகையில் ஏற்றுக்கொள்ள கூடிய கருத்தாகும்.

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாகக் கூட சட்ட விரோத மதுபானம் உள்ளிட்டவற்றைக் அழிக்கலாம். அதனை விடுத்து குறைந்த விலையில் மதுபானத்தை தயாரிப்பது சமூகத்தில் பாரிய சீரழிவுகளுக்கு வழிவகுக்கும்.

குறைந்த விலையில் மதுபானத்தை பெற்றுக் கொள்வதற்காக சீனியில் உற்பத்தி செய்யப்படும் எதனோல் மூலம் மதுபானத்தை தயாரிக்கவுள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி கூறுகின்றார்.

சட்டவிரோத மதுபானங்களை ஒழிப்பதற்காக குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளக் கூடிய மதுபானத்தை அரசாங்கமே தயாரிப்பது தான் மாற்று வழியா? இதுவா அரசாங்கத்தின் கொள்கை?

மக்களின் அத்தியாவசிய தேவை இதுவல்ல. மக்களின் வருமான வழியை அதிகரித்து, அவர்களின் வாழ்க்கை செலவை குறைப்தே அரசாங்கத்தின் பிரதான கடமையாகும்.”என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 163
உலகம்செய்திகள்

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை எதிர்பார்ப்பு: உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பமாகலாம் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில், உலக...

world 162
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை 119 அவசர சேவை தாமதம்: சுவசெரிய முன்னுதாரணத்தை பின்பற்ற ஹர்ஷ டி சில்வா யோசனை

இலங்கை காவல்துறையின் 119 அவசர அழைப்பு முறைமையில் நிலவும் தாமதங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ...

world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...