17 15
இலங்கைசெய்திகள்

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் : சர்வதேச நீதி கோரும் உமா குமரன்

Share

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும் என தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்பேன் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் (Uma Kumaran) தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய (United Kingdom) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் ஆயுதமோதலின் இறுதி தருணங்களில் கொல்லப்பட்ட பொதுமக்களிற்கான மௌன அஞ்சலியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

இதன்போது, இலங்கையில் முள்ளிவாய்க்காலில் சிக்குண்டிருந்த மக்கள்; இனப்படுகொலை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் எப்படி 2009ம் ஆண்டு லண்டனை ஸ்தம்பிக்க செய்தனர் என்பதையும் உமாகுமரன் நினைவு கூர்ந்தார்.

அத்துடன் இந்த வருடம் இலங்கையின் சிரேஸ்ட அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதித்ததன் மூலம் பிரித்தானிய அரசாங்கம் குறிப்பிடத்தக்க நடவடிக்கையை எடுத்தது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
28 9
இலங்கைசெய்திகள்

உலகளாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையின் தென் மாகாணம்

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு விசையை கொண்ட இலங்கையின் தெற்கு மாகாணத்தில் வசிக்கும் மக்களின் ஆயுட்காலம்...

29 7
இலங்கைசெய்திகள்

கொழும்பின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி வசம்..! வெளியான தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்தி கையில் செல்வது உறுதியாகிவிட்டதாக ஆளுங்கட்சிக்கு நெருக்கமான...

27 9
இலங்கைசெய்திகள்

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

செலவுகளை பூர்த்தி செய்வதற்காக மின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது....

25 9
இலங்கைசெய்திகள்

டுபாயில் இருந்து வந்த உத்தரவு..! கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டின் மர்மம்

கொழும்பு கொட்டாஞ்சேனையில் நேற்று(16.05.2025) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலக உறுப்பினர் பழனி...