2025ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பான அனைத்து வகுப்புகள், கருத்தரங்குகள், பயிற்சி செயல் அமர்வுகள், மற்றும் விரிவுரைகள் அனைத்தும் எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதியுடன் தடைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நவம்பர் 4 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை வகுப்புக்களை நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.