5 67
இலங்கைசெய்திகள்

77வது தேசிய சுதந்திர தினம்: அநுர அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

Share

77வது தேசிய சுதந்திர தினம்: அநுர அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

77வது தேசிய சுதந்திர தின விழாவை கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் குறைந்த செலவில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் இது பெருமையுடனும் கம்பீரத்துடனும் நடைபெற வேண்டும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

உள்நாட்டலுவல்கள் கேட்போர் கூடத்தில் இன்று (30) நடைபெற்ற 77 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வின் முதலாவது ஏற்பாட்டுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை, நாட்டின் பொருளாதாரம் உடைந்த நிலையில் உள்ளதால் குறைந்த செலவில் நிகழ்வை நடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த வருடம் சுதந்திர தின விழாவுக்காக அமைச்சு 107 மில்லியன் ரூபாவை செலவிட்டிருந்த நிலையில், இயன்றவரை செலவுகளை குறைத்து இந்த வருட சுதந்திர தின விழா குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர தின விழாவைக் காண பொதுமக்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் சந்தன அபேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
27 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எண்ணெய் மற்றும் தேங்காய் விலை உயர்வு: பேக்கரி மற்றும் உணவு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு!

உள்நாட்டுச் சந்தையில் பாம் ஒயில் (Palm Oil) மற்றும் தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய எண்ணெய் பொருட்களின்...

26 6
செய்திகள்உலகம்

மைக்கேல் ஜாக்சன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்: எஸ்டேட் மற்றும் காசியோ குடும்பத்தினரிடையே சட்டப் போர் தீவிரம்!

மறைந்த பாப் இசை மேதை மைக்கேல் ஜாக்சன் மீது, ஃபிராங்க் காசியோ மற்றும் அவரது உடன்பிறப்புகள்...

25 6
செய்திகள்உலகம்

உலகின் வலிமையான ‘T1200’ கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா: விண்வெளித் துறையில் புதிய மைல்கல்!

சீனா தனது உள்நாட்டுத் தயாரிப்பான T1200-தரத்திலான அதி-உயர்-வலிமை கார்பன் ஃபைபரை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அரசுக்குச்...

24 9
செய்திகள்உலகம்

சீனாவின் புதிய ‘இன ஒற்றுமை’ சட்டம்: சிறுபான்மையினரின் கலாச்சார அடையாளத்திற்கு அச்சுறுத்தலா?

சீனா அண்மையில் “இன ஒற்றுமையை” மேம்படுத்துவதாகக் கூறி புதிய சட்டமொன்றை அங்கீகரித்துள்ளது. ஹான் சீனர்களின் ஆதிக்கம்...