இலங்கைசெய்திகள்

மன்னார் வைத்தியசாலையில் தாய் – சேய் மரணம் : தொடரும் விசாரணை

Share
19 18
Share

மன்னார் வைத்தியசாலையில் தாய் – சேய் மரணம் : தொடரும் விசாரண

மன்னார் பொது வைத்தியசாலையில் (District General Hospital Mannar) மகப்பேற்று சிகிச்சையின் போது மரணமடைந்த தாய் மற்றும் சிசுவின் மரணம் தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்று (17) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது இறந்த பெண்ணின் கணவரிடம் மரணம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டதுடன் அவருடைய சாட்சியம் பதிவு செய்யப்பட்டு அவற்றை நெறிப்படுத்தப்பட்டது.

அதேநேரம் சம்பவத்தின் போது கடமையில் இருந்த இரு தாதிய உத்தியோகத்தர்களையும் விசாரித்து அவர்களின் சாட்சியங்களையும் நெறிப்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இறந்த பெண்ணின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்கப் பெறாமையினால் குறித்த அறிக்கையை விரைந்து பெறுவதற்கான நினைவூட்டல் கடிதத்தை அனுப்பி உடற்கூற்று பரிசோதனை அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு மரணித் தாயின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் கோரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணை மேலதிக நடவடிக்கைகளுக்காக ஜனவரி மாதம் 20ம் திகதி தவணையிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை மன்னார் பொது வைத்தியசாலையில் கடந்த நவம்பர் மாதம் 19 ஆம் திகதி பிரசவத்தின் போது மரணித்த தாய் மற்றும் சிசு தொடர்பில் முறையான விசாரணையை முன்னெடுக்குமாறு பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...