இலங்கைசெய்திகள்

உற்று நோக்கும் சர்வதேசம் – இன்று இந்தியா பறக்கும் ஜனாதிபதி அநுர

20 13
Share

உற்று நோக்கும் சர்வதேசம் – இன்று இந்தியா பறக்கும் ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு (India) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

குறித்த விஜயமானது இன்று (15) மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த விஜயத்தின் போது இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) ஆகியோரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

பின்னர் இந்திய அரசாங்கத்தின் பல பலம் வாய்ந்த அமைச்சர்களுடன் ஜனாதிபதி இருதரப்பு பேச்சுக்களை நடத்துவார் மற்றும் இலங்கைக்கு இடையில் முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான வர்த்தக திட்டத்தில் இந்தியாவும் இணைந்துகொள்ளும்.

பின்னர் ஜனாதிபதி புத்த கயாவிற்கு விஜயம் செய்யவுள்ளதுடன், ஜனாதிபதியுடன் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும், இந்தியப் பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையின்படி, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இலங்கைக்கு மிக நெருக்கமான அண்டை நாடாக முன்னுரிமை அளிக்கப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சு அநுரகுமார் திஸாநாயக்கவின் இந்திய விஜயம் குறித்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....