13 9
இலங்கைசெய்திகள்

மாகாணசபைத் தேர்தல் : வெளியான தகவல்

Share

மாகாணசபைத் தேர்தல் : வெளியான தகவல்

எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் உள்ளூராட்சி (LG) மன்ற தேர்தலுக்குப் பின்னர் மாகாண சபைத் தேர்தல்கள் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும் என்று ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் (PMD) மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று குறிப்பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் 2014 இல் ஊவா மற்றும் தென் மாகாணங்களுக்கும், 2013 இல் வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கும், 2012 இல் கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும் மாகாண சபை தேர்தல்கள், நடத்தப்பட்டன.

மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) – ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe)ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றத்தில் எல்லை நிர்ணய அறிக்கை நிராகரிக்கப்பட்டதன் காரணமாக, தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்தாண்டு காலத்துக்குப் பின்னர் முடிவடைவதற்கு காரணமான தேர்தல்கள் பிற்போடப்பட்டன.

கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தேர்தல்கள் மேலும் ஒத்திவைக்கப்பட்டன.

செவ்வாய்க்கிழமை (3) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகள் தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில், மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இன்னும் உறுதியான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெளிவுபடுத்தினார்.

தற்போதுள்ள அரசியலமைப்பின் படியே மாகாண சபைகள் தற்போது பராமரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு வரும் புதிய அரசியலமைப்பில் மாகாண சபைகளின் எதிர்காலப் பாத்திரத்தை தீர்மானிப்பதற்கான பொது ஆலோசனைகளும் உள்ளடக்கப்படும் என்றும் கலாநிதி ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், புதன்கிழமை (4) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது, ​​ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake ), மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார்.

Share
தொடர்புடையது
24 6719ef7b673a7
அரசியல்செய்திகள்

டயானா கமகே கடவுச்சீட்டு விசா வழக்கு: மேலதிக சாட்சியங்களுக்காக பிப். 16க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத்...

Waqf Board Donates Rs 10 Million 1170x658 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் சேதமடைந்த மதத் தலங்களைப் புனரமைக்க: வக்ஃப் சபை 10 மில்லியன் நிதி நன்கொடை!

கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த மதஸ்தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்காக, வக்ஃப் சபையினால்...

Untitled
அரசியல்இலங்கைசெய்திகள்

கிராம உத்தியோகத்தர்களுக்கு எதிரான பொதுவான குற்றச்சாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் – இம்ரான் மகரூப் கோரிக்கை!

நாட்டிலுள்ள ஒட்டுமொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும்,...

24 66c584aba0b91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வெல்லவாய – தனமல்வில விபத்து: ஒருவர் பலி, 4 பேர் காயம்!

வெல்லவாய – தனமல்வில வீதியில் உள்ள தெல்லுல்லப் பகுதியில் இன்று (டிசம்பர் 15) ஏற்பட்ட கோர...