26 4
இலங்கைசெய்திகள்

அரிசி விற்பனை : ஜனாதிபதியின் அதிரடி முடிவு : விலையும் நிர்ணயம்

Share

அரிசி விற்பனை : ஜனாதிபதியின் அதிரடி முடிவு : விலையும் நிர்ணயம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க இன்று(07) அரிசி ஆலை உரிமையாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது ஒரு கிலோ நாட்டு அரிசியை மொத்த விற்பனை விலையாக 225 ரூபாவுக்கும் சில்லறை விலை 230 ரூபாவுக்கும் நுகர்வோருக்கு வழங்குமாறு அவர் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

எதிர்வரும் பத்து நாட்களுக்குள் இது தொடர்பில் தீவிரமாக செயற்படுமாறும், இதற்கு முரணாக செயற்படும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி நுகர்வோர் அதிகாரசபைக்கு அறிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எமது நாட்டில் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு அதிகூடிய முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதனைத் தொடர்ந்து நீர்ப்பாசனம் மற்றும் விவசாயத் துறைகளில் அதிகளவான முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, விவசாயிகளுக்கே அதிகளவான சலுகைகள் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

வர்த்தகர்களுக்கு நெல் கொள்வனவு செய்வதற்கு குறைந்த வட்டியில் வங்கிக்கடன் வழங்கப்பட்டதை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, எனவே அரிசிக்கான மக்களின் உரிமையில் கை வைக்க வேண்டாம் என அரிசி ஆலை உரிமையாளர்களிடம் தெரிவித்தார்.

அதன்படி, அரிசியின் விலை பின்வருமாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு கிலோ நாட்டு அரிசியின் மொத்த விலை 225 ரூபாவாகும். சில்லறை விலை 230 ரூபா.

ஒரு கிலோ வெள்ளை அரிசியின் மொத்த விலை 215 ரூபாவாகும். சில்லறை விலை 220 ரூபா.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ நாட்டு அரிசியின் சில்லறை விலை 220 ரூபாவாகும்.

ஒரு கிலோ சம்பாவின் மொத்த விலை 235 ரூபாவாகும். சில்லறை விலை 240 ரூபா.

ஒரு கிலோ கீரி சம்பா மொத்த விற்பனை விலை 255 ரூபா. சில்லறை விலை 260 ரூபா.

Share
தொடர்புடையது
WhatsApp Image 2024 08 02 at 17.13.20
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பெற்றோருக்குச் சுமையற்ற, நவீன கல்வி முறை – ஜனாதிபதி அநுர குமார!

பெற்றோருக்குப் பொருளாதாரச் சுமையையும், பிள்ளைகளுக்குத் துயரத்தையும் தராத ஒரு புதிய கல்வி முறையை நாட்டில் உருவாக்கப்போவதாக...

images 2026 01 03t094503424 26244
உலகம்செய்திகள்

Grok AI-க்கு உலகளாவிய தடை மற்றும் கட்டுப்பாடுகள்: ‘டீப்ஃபேக்’ விவகாரத்தால் ஈலான் மஸ்க் பணிந்தார்!

ஈலான் மஸ்க்கிற்குச் சொந்தமான ‘Grok’ செயற்கை நுண்ணறிவுத் தளம், பெண்கள் மற்றும் சிறுவர்களின் புகைப்படங்களைத் தவறாகச்...

MediaFile 8 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி டெண்டர் ஊழல் நிறைந்தது: அமைச்சர் குமார ஜயகொடிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க சவால்!

தற்போதைய அரசாங்கத்தின் நிலக்கரி விலைமனுக் கோரலில் (Coal Tender) பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள...

1500x900 44538875 ipl2026
விளையாட்டுசெய்திகள்

ஐ.பி.எல் 2026: சின்னசுவாமி மைதானத்திலிருந்து வெளியேறுகிறது ஆர்.சி.பி! – ராஜஸ்தான் அணியும் இடம் மாறுகிறது.

ஐ.பி.எல் 2026 தொடரில் முன்னணி அணிகளான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ்...