1 1 3
இலங்கை

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபய காரணமல்ல: அரசாங்கம் தெரிவிப்பு

Share

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபய காரணமல்ல: அரசாங்கம் தெரிவிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) காரணமல்ல என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதாக பலர் கூறுவதாக இராஜாங்க அமைச்சர் சத்துரங்க அபேசிங்க நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், அந்த கூற்றுகள் தவறானவை என்று அவர் கூறியுள்ளார். 1977ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட மோசமான பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாகவே பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2019ஆம் ஆண்டுக்குள் இலங்கை ஏற்கனவே திவாலாகி விட்டதாக அவர் கூறியுள்ளார்.

இந்தநிலையில், 2022இல் ஆயிரக்கணக்கானோர் வீதியில் இறங்கி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி அவரை பதவியில் இருந்து வெளியேற்றினர்.

இலங்கையில் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சவே முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு இன்றும் சுமத்தப்பட்டு வருகிறது.

Share
தொடர்புடையது
20 7
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணம் மணல்காடு பகுதியில் நள்ளிரவில் கொள்ளைச் சம்பவம்: கணவர் படுகாயம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, மணல்காடு சந்தியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இன்று (மார்ச் 8) அதிகாலை...

18 7
இலங்கைஅரசியல்செய்திகள்

யாழ். மாநகர வட்டாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், யாழ். மாநகர...

17 7
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு 25 சதவீத சம்பள உயர்வு: நிர்வாகம் அறிவிப்பு!

இலங்கை மின்சார சபையின் (CEB) அனைத்து ஊழியர்களுக்கும் 25 சதவீத சம்பள உயர்வு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக...

16 7
இலங்கைசெய்திகள்

ஈரானிய மாலுமிகள் மீட்பு விவகாரம்: இலங்கையின் இறையாண்மையை மதிப்பதாக அமெரிக்கா அறிவிப்பு!

இலங்கைக் கடற்பரப்பில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் ‘IRIS Dena’ மற்றும் அவசர உதவி கோரியிருந்த ‘IRIS...