20 1
இலங்கைசெய்திகள்

பிரான்ஸ் நாடாளுமன்ற பிரதிநிக்கு எடுத்துரைக்கப்பட்ட ஈழத்தமிழரின் இன்றைய அரசியல் நிலைமை

Share

பிரான்ஸ் நாடாளுமன்ற பிரதிநிக்கு எடுத்துரைக்கப்பட்ட ஈழத்தமிழரின் இன்றைய அரசியல் நிலைமை

ஈழத்தமிழரின் இன்றைய அரசியல் நிலைமை தொடர்பிலும் தமது அரசியல் சமூக முன்னெடுப்புகளுக்கு உள்ள தடைகள் தொடர்பாகவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பிரான்ஸ் நாடாளுமன்ற பிரதிநி கார்லோஸ் மாட்டீன் பிலோங்கோவிற்கு எடுத்துரைத்துள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் துணைப்பிரதமர் மகிந்தன் சிவசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் குறித்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதன்போது, கார்லோஸ் பிலோங்கோ தனது உரையில், தனது தொகுதியில் உள்ள ஈழத்தமிழர்களோடு சிறுவயதில் இருந்து தான் பழகிவருவதால் அவர்களுடைய இன்றைய அரசியல் நிலமை தொடர்பாக தான் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து உரையாற்றிய தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன், நா.க.த.அரசாங்கம் முன்னெடுக்கும் போராட்ட வழிமுறைகள் தொடர்பாக குறிப்பாக சட்டப்போராட்ட முன்னைடுப்புகள் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.

மேலும், தமிழர்களின் இன்றைய அரசியல் நிலமைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்து விளக்குவதற்கு இருக்கின்ற தடைகள் பற்றி சந்திப்பில் கலந்துக் கொண்டிருந்த தமிழ் இளைஞர்கள் விரிவாக விளக்கியுள்ளனர்.

இதேவேளை, விடுதலைப்புலிகள் மீதான தடை தம்முடைய சந்திப்புகள், அரசியல் கருத்துரைப்புகளுக்கு தடையாக இருப்பதனையும் தமது ஆர்ப்பாட்டங்கள், சந்திப்புகள் பிரச்சாரங்களின் போது தமது அடையாளத்தை வெளிப்படுத்தும் தமிழீழ தேசியக்கொடியை முன்னிறுத்த முடியாதிருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்தோடு, சந்திப்பில் கலந்துக் கொண்டிருந்த LUTS அமைப்பினர் நாட்டுக்கு நாடு தடைகள் வேறுபட்டிருப்பதையும், தமது நாட்டில் ஒரளவு தளர்வு இருப்பதையும் எடுத்துக் கூறியுள்ளனர்.

மேலும், அதன் போது சட்டத்துறையில் கலாநிதி பட்டம் பெற்ற சாருகா தேவகுமார் தமிழர்களுக்கான மாறுகால நீதிபற்றியும், அது தொடர்பாக மேற்கொள்ளும் ஆய்வுகள் பற்றியும் விளக்கமளித்துள்ளார்.

சந்திப்பில் கலந்துகொண்ட சட்டவாளர் எய்சே சூய்டி சிறிலங்கா அரசிடம் இருந்து நீதியையோ,தீர்வுகளையோ பெற்றுக்கொள்ள முடியாது என வேறு நாடுகளின் ஆதாரங்களோடு எடுத்து விளக்கியுள்ளார்.

இந்த உரைகளையும் கேள்விகளையும் செவிமடுத்த கார்லோஸ் பிலோங்கோ அவர்கள் தமிழர்களின் அரசியல் நிலமைகளை தமது கட்சியினருக்கு எடுத்து விளக்கி, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்வதாக கூறியிருந்தார்.

இறுதியாக இளையோர்கள் தம்மை சிறிலங்கா என அழைக்காது, தமிழர் என அழைக்குமாறும் அவரிடம் கோரியுள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...

25 690cd7c953777
செய்திகள்உலகம்

மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியில் சர்ச்சை: மெக்சிகோ அழகி பாத்திமா போஷை ‘முட்டாள்’ எனக் கூறி அவமானம் – போட்டியாளர்கள் வெளிநடப்பு!

தாய்லாந்தில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள 2025ஆம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகிப் போட்டியை முன்னிட்டு,...