இலங்கை
சம்பளம் பெறுவதில்லை என உறுதியளிக்கவில்லை: அநுர தரப்பு சுட்டிக்காட்டு
சம்பளம் பெறுவதில்லை என உறுதியளிக்கவில்லை: அநுர தரப்பு சுட்டிக்காட்டு
நாடாளுமன்ற உறுப்பினர் சம்பளம் பெறுவதில்லை என உறுதியளிக்கவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமசந்திர(Lakmali Hemachandra) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்களை குறைப்பதாக கொள்கைப் பிரகடனத்தில், எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் தொடர்பில் கட்சி கொள்கை பிரகடனத்தில் தெளிவான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியைப் போன்றே எதிர்க்கட்சியையும் பிரதிநிதித்துவம் செய்கின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய எதிர்க்கட்சி உறுப்பினர்களின் சம்பளங்களை குறைக்குமாறு தம்மால் கோர முடியாது அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னரும் தமது கட்சியின் உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக அங்கம் வகித்தனர் எனவும் அவர்கள் சம்பளத்தை பொது நிதியில் வைப்பிலிட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே சம்பளத்தை பொது நிதியில் வைப்பிலிடுவது ஒன்றும் புதிய விடயமல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கட்சி தமக்கு போதுமானளவு கொடுப்பனவை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.