இலங்கைசெய்திகள்

ரணில் விக்ரமசிங்க பயன்படுத்தும் வாகனத்தின் பெறுமதி! சாதாரண மக்களும் கார் வாங்கும் நிலை

Share
15 2
Share

ரணில் விக்ரமசிங்க பயன்படுத்தும் வாகனத்தின் பெறுமதி! சாதாரண மக்களும் கார் வாங்கும் நிலை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) பயன்படுத்தும் வாகனத்தின் பெறுமதி 395 இலட்சம் ரூபா. அந்த வாகனத்தின் டயர் ஒன்றின் விலையே 5 இலட்சம் ரூபாவாகும் என்று தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நளின் ஹேவகே(Nalin Hewage) தெரிவித்துள்ளார்.

மக்கள் சந்திப்பொன்றின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்றத் தேர்தல் திட்டமிட்டபடி 14ஆம் திகதி நடைபெறும். 16அல்லது 17ஆம் திகதி ஆகும்போது அமைச்சரவை பதவிப்பிரமாணங்களைச் செய்துகொள்ளும்.

21ஆம் திகதி நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு கூட்டப்படும். அதன்பின்னர் சிறந்தவொரு நாட்டை உருவாக்கின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

மக்களுக்கான சிறந்த வாழ்க்கை தரம் உருவாக்கப்பட வேண்டும். அதற்காக கட்டடங்களை நிர்மாணிப்பது அபிவிருத்தி என்றாகிவிடாது.

வீதிகளில் குடும்பமாகச் செல்கின்றவர்களைப் பார்கின்றபோது எமக்கு மிகுந்த கவலையாக உள்ளது. கணவன், மனைவி இரண்டு குழந்தைகள் அனைவரும் மோட்டார் வண்டியில் மழையில் நனைந்தவாறு செல்கிறார்கள்.

வெயிலுக்குள் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றார்கள். இவர்கள் கார் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு முடியாது இருக்கின்றது. அவர்களின் வாழ்நாள் பூராகவும் பணத்தைச் சேர்த்தால் கூட அவர்களால் கார் ஒன்றை கொள்வனவு செய்ய முடியாத நிலைமையே உள்ளது.

ஆகக்கூடுதலாக அவர்களால் உழவு இயந்திரம் ஒன்றுக்கான டயரையே கொள்வனவு செய்யும் இயலுமை ஏற்படுகின்றது. இதற்கு காரணம், கடந்த காலத்தில் நாட்டை ஆட்சி செய்த ஊழல், மோசடிகள் நிறைந்த ஆட்சியாளர்கள் தான்.

அவர்கள் தமது மோசடிகளை மறைப்பதற்காக இறக்குமதி வரி வீதத்தினை அதிகரித்துள்ளார்கள். கார்களின் விலைகள் பெரிதாக இல்லை. ஜப்பானில் உள்ள விக்ஸ் ரக காரை 12இலட்சத்துக்கு கொள்வனவு செய்வதற்கான நிலைமைகளை ஏற்படுத்த முடியும்.

ஆனால் மோசமான ஆட்சியாளர்களால் அதனைச் செய்யமுடியாதுள்ளது. அவர்கள் இறக்குமதிக்கான வரியை 75 சதவீதத்துக்கு அதிகமாக விதிக்கும் நிலைமையே உள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் வாகனம் 395இலட்சமாக இருப்பதோடு அவருடைய வாகனத்தில் டயர் ஒன்றின் பெறுமதியே ஐந்து இலட்சங்களாக உள்ளது. ஆகவே சாதாரண மக்களையும் வாகன உரிமையாளர்களாக மாற்றும் நிலைமையை அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் நாம் உருவாக்குவோம் என குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...