இலங்கை
அரசியல் அச்சத்தில் ரணில் – திரைமறைவில் அரங்கேற்றப்படும் சதி நடவடிக்கைகள்
அரசியல் அச்சத்தில் ரணில் – திரைமறைவில் அரங்கேற்றப்படும் சதி நடவடிக்கைகள்
சமகால அரசியல் நெருக்கடி நிலைமைகளை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தற்போது ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்படுகிறது.
இந்த பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் தொடர்பான தகவல்களை வெளியிடப் போவதாகவும் அநுர அரசாங்கம் தெரிவித்திருந்தது.
எனினும் இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடாத நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில ஊடக சந்திப்பின் மூலம் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான சில தகவல்களை வெளியிட்டிருந்தார்.
அவரின் ஊடக சந்திப்பு குறித்து அதிகம் எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தாலும், அவரின் தகவல்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும், புதியதாகவும் எதுவும் இருக்கவில்லை.
இந்நிலையில் அவரின் முயற்சி படுதோல்வி அடைந்த நிலையில், தற்போது அவர் அமைதியாகி உள்ளார்.
இந்நிலையில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான தகவல்களை வெளியிடுவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தியுள்ளார்.
ஏற்கனவே பாரம்பரியமிக்க அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி, முழுமையாக அழிவடையும் நிலையில் உள்ளது.