இலங்கை
அநுரவின் கையொப்பத்துடன் கூடிய நாணயத்தாள்கள் விரைவில்
அநுரவின் கையொப்பத்துடன் கூடிய நாணயத்தாள்கள் விரைவில்
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின்(Anura Kumara Dissanayakke) கையொப்பத்துடன் கூடிய நாணயத்தாள்கள் எதிர்காலத்தில் வெளிவரக் கூடும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பயன்படுத்த முடியாத பழைய நாணயத் தாள்களுக்கு பதிலாக புதிய நாணயத் தாள்களை மத்திய வங்கி அச்சிடும்.
புதிதாக இவ்வாறு அச்சிடப்படும் நாணயத் தாள்கள் தற்போதைய ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியிடப்படும். இது ஒரு சாதாரண செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.