இலங்கை
தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!
தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்!
இன்று (30.10.2024) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளனர்.
தொடருந்து நிலைய அதிபர்கள் அடுத்த 72 மணி நேரத்துக்குள் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர்.
நடைமுறைகளை மீறி தொடருந்து நிலைய அதிபர்களை நியமித்தமைக்கு எதிராகவே குறித்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.
குறித்த தகவல்களை இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் (SLRSMU) தெரிவித்துள்ளது.
ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தொடருந்து நிலைய அதிபர்கள் மற்றும் தொடருந்து கட்டுப்பாட்டாளர்களை குறித்த பதவிகளுக்கான பரீட்சைகளை நடத்தி நியமிப்பதற்கும் அல்லது பதவி உயர்வு வழங்கி சம்பள உயர்வு வழங்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆயினும் குறித்த நடைமுறைக்கு மாறாக தற்போது இடம்பெறுவதாக தெரிவித்தே இந்த தொழிற்சங்க போராட்டம் எதிர்வரும் 72 மணித்தியாலங்களுக்குள் ஆரம்பிக்கப்படும் என தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.