15 24
இலங்கைசெய்திகள்

முட்டை விலை குறித்து வெளியான தகவல்

Share

முட்டை விலை குறித்து வெளியான தகவல்

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், உள்ளூர் சந்தையில் முட்டையின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கம் அண்மையில் மொத்த விற்பனை விலையை அறிவித்தது.

அதன்படி, சிவப்பு முட்டை ஒன்றின் மொத்த விலை 36 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெள்ளை முட்டை ஒன்றின் மொத்த விலை 35 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், ஒரு முட்டையை 41 ரூபாவுக்கும் குறைவான சில்லறை விலையில் விற்பனை செய்யும் வகையில் சந்தைக்கு விநியோகிப்பதற்கு முட்டை உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்ததாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

 

மேலும், தற்போது நாளொன்றுக்கு தேவையான முட்டை உற்பத்தி 85,000 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
dengue
இலங்கை

தென் மாகாணத்தில் அதிகம் பதிவாகும் டெங்கு நோயாளிகள்.

இந்த ஆண்டில் இதுவரை 88,522 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது....

parlimen president 1
இலங்கை

சிறைச்சாலைகள் மற்றும் கைதிகள் தொடர்பில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், சிறைச்சாலைகளில் நிலவும் நிலைமை...

Department of Prisons
இலங்கை

மீண்டும் சிறைச்சாலைத் துறை பொறுப்பில் வந்தது பல்லன்சேன சிறைச்சாலை.

பல்லன்சேன சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க...

palansena
இலங்கை

பல்லன்சேன சிறைச்சாலையில் தொடரும் போராட்டம் – அதிகரிக்கப்பட்டது பாதுகாப்பு!

நீர்கொழும்பு, தளுபொத, பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளமையினால் அங்கு தொடர்ந்தும் பதற்றம்...