7 24
இலங்கைசெய்திகள்

தமிழ் மக்களது எதிர்காலம் : பிள்ளையான் வெளியிட்ட அறிவிப்பு

Share

தமிழ் மக்களது எதிர்காலம் : பிள்ளையான் வெளியிட்ட அறிவிப்பு

நாட்டில் ஒரு தடுமாற்றமான சூழல் காணப்படுகிறது. அதனை நாம் அறிவோம், வெற்றி தோல்விக்கு அப்பால் தமிழ் மக்களது எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு நாம் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.

இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரைசந்திரகாந்தன்(sivanesathurai santhirakanthan) தெரிவித்தார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்று (17.10.2024) திருகோணமலையில்(trincomale) இடம்பெற்றது.இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் பங்கேற்ற அவர் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமது கட்சி சார்பாக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.  இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

திருகோணமலை மாவட்டத்தினை பொறுத்தவரையில், தோப்பூரிலிருந்து வரும் காணி மாபியாக்களது கைகளில் இருந்து திருகோணமலை எல்லைக் கிராமங்களில் வசிக்கும் ஆதிக்குடிகளது காணிகளை காப்பாற்ற வேண்டும், அதற்கு இந்த நாடாளுமன்ற தேர்தல் வாய்ப்பினை நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் பாரிய சக்தியாக நாம் உருவெடுத்து வருகிறோம். பலமான அதிகாரப் பொறுப்புடன் ஒரு பலமான சக்தியாக மக்களுக்காக வாழும் ஒரு இயக்கமாக நாம் மாற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...