நாட்டை மீட்டெடுத்த ரணிலை தூக்கி எறிந்த மக்கள்: ஜீவன் தொண்டமான் விசனம்
நாட்டை மீட்டெடுத்த முன்னாள் ஜனாதிபதி ரணிலை (Ranil Wickremesinghe) மக்கள் தூக்கி எறிந்தவாறு தம்மை மக்கள் தூக்கி எரியாமல் இருந்தால் சரி என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள கடற்றொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் சலுகைகளை வழங்கிய புதிய ஜனாதிபதி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகைகளையும் வழங்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றையதினம் (16) நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் இடம்பெற்ற முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த ஜீவன் தொண்டமான், “பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள விடயத்தில் 1350 ரூபாய் அடிப்படை சம்பளமும் மேலதிக கொடுப்பனவு 350 ரூபாவை அதிகரிக்குமாறு சம்பள நிர்ணய சபையில் நாங்கள் கோரிக்கையை முன்வைத்த போது அதனை நிராகரித்தது தற்போதய ஜனாதிபதியுடைய கட்சியான தேசிய மக்கள் சக்தி.என்றார்.