இலங்கை
இந்தியா- இலங்கை இடையே ரயில் சேவை: 5 பில்லியன் டொலர் ஒதுக்கீடு என அறிவிப்பு
இந்தியா- இலங்கை இடையே ரயில் சேவை: 5 பில்லியன் டொலர் ஒதுக்கீடு என அறிவிப்பு
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான 5 பில்லியன் டொலர் செலவில் சாலை மற்றும் ரயில் இணைப்புக்கான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்ளன என்று இலங்கையின் சுற்றுச்சூழல் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், சீனச் செல்வாக்கை முறியடிப்பதற்கான புதுடில்லியின் முயற்சிகளுக்கு மத்தியில், இலங்கை தேசத்தால் அறிவிக்கப்பட்ட முதலாவது பெரிய இருதரப்பு உட்கட்டமைப்புத் திட்டம் இதுவாகும்.
இந்தியா இலங்கையின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக உள்ளது மற்றும் மிகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டு (FDI) பங்களிப்பாளர்களில் ஒன்றாகும்.
2021 இல் இலங்கையில் இந்திய முதலீடு சுமார் 142 மில்லியன் டாலர்கள் ஆகும்.
இந்நிலையில், “கடந்த மாதம் நான் இந்தியாவுடன் புதுதில்லியில் ஒரு சந்திப்பில் பங்கேற்றேன், மேலும் இந்தியாவில் ராமேஸ்வரம் மற்றும் இலங்கையில் திருகோணமலை இடையே நெடுஞ்சாலை மற்றும் ரயில் பாதை இணைப்பை ஏற்படுத்த உள்ளோம்” என்று பி.கே.பிரபாத் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.