இலங்கை
மண்சரிவு- வெள்ளபெருக்கு குறித்து தொடரும் எச்சரிக்கை!
மண்சரிவு- வெள்ளபெருக்கு குறித்து தொடரும் எச்சரிக்கை!
நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காலி, கம்பஹா, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நுவரெலியா மற்றும் குருநாகல் மாவட்டங்களில் முதல் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் களனி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்படும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே களனி கங்கைக்கு அண்மித்த தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு குறித்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சீதாவக, தொம்பே, ஹோமாகம, கடுவெல, பயகம, கொலன்னாவ, கொழும்பு, வத்தளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அவ்வழியாகச் செல்லும் சாரதிகளை மிகவும் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.