இலங்கைசெய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழு விஜயம் : அரசாங்கத்தின் நிலைப்பாடு

17
Share

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழு விஜயம் : அரசாங்கத்தின் நிலைப்பாடு

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழு, இன்று (01) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் (Vijitha Herath), கருத்து வெளியிட்டுள்ளார்.

ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஸ்ண ஸ்ரீனிவாசன் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இலங்கையின் புதிய பொருளாதாரக் குழு ஆகியோரை சந்திக்கவுள்ளனர்.

இந்த சந்திப்பதற்காக குறித்த குழு ஒக்டோபர் இரண்டாம் திகதி முதல் நான்காம் திகதி வரை கொழும்புக்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளது.

இந்தநிலையில், இந்த சந்திப்பின் போது, நாட்டின் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல்கள் மாத்திரமே இடம்பெறும் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அததோடு, கட்டமைப்பு தொடர்பான மேலதிக கலந்துரையாடல் ஒக்டோபர் மாத இறுதியில் நியூயோர்க்கில் இடம்பெறும் எனவும் அவர் நேற்று (01) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் இலங்கையின் பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, சர்வதேச நாணய பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...