4 37
இலங்கை

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை வீரர் படைத்த உலக சாதனை

Share

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை வீரர் படைத்த உலக சாதனை

இலங்கை(sri lanka) கிரிக்கெட் வீரர் கமிந்து மெண்டிஸ்(Kamindu Mendis), டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது முதல் 8 போட்டிகளில் ஒவ்வொன்றிலும் 50 ஓட்டங்களை எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்று வரலாற்று புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

இந்த குறிப்பிடத்தக்க சாதனை ஒரு புதிய உலக சாதனையாக கருதப்படுகிறது. இது அவரது டெஸ்ட் அறிமுகத்திலிருந்து நிலையான துடுப்பாட்ட திறமையை எடுத்துக்காட்டுகிறது.

கடந்த ஆண்டு, பாகிஸ்தானின்(pakistan) சவுத் ஷகீல்(Saud Shakeel )டெஸ்ட் வரலாற்றில் தனது முதல் ஏழு போட்டிகளில் ஒவ்வொன்றிலும் 50+ஓட்டங்களை எடுத்த முதல் வீரர் ஆனார்.

காலியில்(galle) நடைபெற்றுவரும் நியூஸிலாந்துக்கு (new zealand)எதிரான போட்டியில் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களை பெற்று இந்த சாதனையை படைத்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே மைதானத்தில் அவுஸ்திரேலியாவுக்கு(australia) எதிராக அறிமுகமானதில் இருந்து மெண்டிஸ் தனது எட்டாவது அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
court
செய்திகள்இலங்கை

கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல்: மோட்டார் சைக்கிள் அதிரடிப்படை அதிகாரிகள் 6 பேருக்கு விளக்கமறியல்!

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை...

image 2f3d7cb265
செய்திகள்இலங்கைபிராந்தியம்

70 ரூபாய் குடிநீர் போத்தல் 100 ரூபாய்க்கு விற்பனை: கொழும்பு வர்த்தகருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக...

chathuranga
செய்திகள்இலங்கை

எச்சரிக்கை: பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி!

கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் பெயரைப் பயன்படுத்தி, இனந்தெரியாத நபர்...

109807728 duglasdevanantha 3
செய்திகள்அரசியல்இலங்கை

அரசு எதையும் தாம்பாளத் தட்டில் தந்துவிடாது; பேசிப் பெற பலமான ஆணை வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!

தேசிய மாநாட்டை நடத்தி கட்சியை மீண்டும் எழுச்சிபெறச் செய்ய அனைவரும் தயாராக வேண்டும் என ஈழ...