இலங்கைசெய்திகள்

பூமிக்கு கிடைக்கப்போகும் சிறிய நிலவு!

Share
8 24
Share

பூமிக்கு கிடைக்கப்போகும் சிறிய நிலவு!

இந்த வருடத்தில் தற்காலிகமாக மற்றொரு நிலவு பூமிக்கு கிடைக்கப்போகிறது என்று விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Asteroid 2024 PT5 என்று பெயரிடப்பட்ட சிறு கோள், கடந்த ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த சிறுகோளானது 2024 செப்டம்பர் 29 முதல் 2024 நவம்பர் 25 வரை பூமிக்குச் சிறு நிலவாக (mini-moon) செயற்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த Asteroid 2024 PT5, 10 மீற்றர்கள் [33 அடி] உள்ள சிறு கோள் என அளவிடப்பட்டுள்ளது.

இந்த சிறுகோள் குறுகிய காலகட்டத்திற்கு மட்டும் பூமியின் புவியீர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு பூமியைச் சுற்றும்.

ஆனால் ஒரு முறை முழு சுற்றை நிறைவு செய்யும் முன்னரே (அதாவது நவம்பர் 25க்கு பின்னர்) பூமியின் புவியீர்ப்பு விசையிலிருந்து விடுபட்டுச் சூரியனைச் சுற்றத் தொடங்கும் எனவும் கூறப்படுகின்றது.

மிகவும் சிறிய அளவில் உள்ளதால் பூமியைச் சுற்றும் காலகட்டத்தில் இதை வெறும் கண்களால் பார்ப்பது சிரமம் என அமெரிக்க ஆஸ்ட்ரோனாமிகள் சமூக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு NX1 என்ற சிறு நிலவு பூமியைச் சுற்றியது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...