2 21
இலங்கைசெய்திகள்

வடக்கின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான ஏற்றுமதி செயலாக்க வலய நடவடிக்கைகள் ஆரம்பம்

Share

வடக்கு மாகாணத்தில் ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ள மூன்று ஏற்றுமதி செயலாக்க வலயங்களில் யாழ்ப்பாணம் (Jaffna) – காங்கேசன்துறை மற்றும் கிளிநொச்சி (Kilinochchi) – பரந்தன் ஆகிய ஏற்றுமதி செயலாக்க வலயங்களின் நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டு வலயங்களும் உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டு அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ளன. வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ், முதலீட்டு ஊகுவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம ஆகியோரால் ஏற்றுமதி செயலாக்க வலயத்தின் நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணத்தில் பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதியால் இதற்கான பத்திரம் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் ஸ்தாபிக்கப்பட்டிருக்க கூடிய ஏற்றுமதி செயலாக்க வலயத்திற்கு கனேடிய இலங்கை வர்த்தக தொழிற்துறையினர் (Canada Sri Lanka Business Conversation) முதலீட்டை மேற்கொள்ள முன்வந்துள்ளனர்.

இந்த வலயத்திற்கான ஆரம்பக்கட்ட காணி பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நூறு மில்லியன் அமெரிக்க டொலர் (100 MN USD) முதலீடு செய்யப்படுகிறது.

அத்துடன் ஒன்று தசம் ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர் (1.5 BILL USD) முதலீட்டில் பாரிய செயற்றிட்டங்களையும் முன்னெடுக்க கனேடிய இலங்கை வர்த்தக தொழிற்துறையினர் தீர்மானித்துள்ளனர்.

இந்த திட்டத்தின் கீழ் சுகாதார மேம்பாடு, முதியோர் இல்ல அபிவிருத்தி, தொழிற்துறை, தொழில்நுட்பவியல், சிறு வர்த்தகத் துறை மேம்பாடு, வரிவிலக்களிக்கப்பட்ட அங்காடி தொகுதி, சுற்றுலாத்துறை அபிவிருத்தி போன்ற பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள முழுமைப்படுத்தப்பட்ட அரச தனியார் முதலீட்டு திட்டமாக இது அமையவுள்ளது.

இந்த திட்டத்தில் கனேடிய இலங்கை வர்த்தக தொழிற்துறையினருடன் இலங்கை முதலீட்டு சபையும் கைகோர்த்துள்ளதுடன் கிளிநொச்சி பரந்தனில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி செயலாக்க வலயத்தின் அனைத்து செயற்பாடுகளும் இலங்கை முதலீட்டு சபையினால் உள்ளூர் ஏற்றுமதி, உற்பத்தி துறையினரை கொண்டு நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வலயத்திலும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி செயலாக்க வலயங்களின் ஊடாக வடக்கு மாகாணத்தில் காணப்படும் தொழில் இன்மை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும், பொருளாதார மேம்பாட்டிற்கு உந்து சக்தியாக இது அமையும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வடக்கிற்கான விஜயத்தின் போது வேலையற்ற பட்டதாரிகள், இளைஞர், யுவதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வடக்கு மாகாணத்திலுள்ள ஆளணி வெற்றிடங்களை பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகளை கொண்டு நிரப்புவதற்கான அனுமதி கிடைத்துள்ள போதிலும், தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கு அமைய ஆட்சேர்ப்பு நடவடிக்கை தாமதமாகியுள்ளதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...