35 2
இலங்கைசெய்திகள்

இலங்கை விமானப்படையில் இணையும் அமெரிக்காவின் அதிநவீன விமானம்

Share

இலங்கை விமானப்படையில் இணையும் அமெரிக்காவின் அதிநவீன விமானம்

இலங்கை விமானப்படைக்கு (SLAF) அமெரிக்காவினால் (US) அன்பளிப்பு செய்யப்பட்ட Beechcraft King Air 360ER விமானம் அடுத்த வாரம் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் பங்காளித் திறனைக் கட்டியெழுப்பும் நோக்கத்தில் இந்த அன்பளிப்பு வழங்கப்படுவதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த நவீன விமானம், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், போதைப்பொருள் தடுப்பு மற்றும் கடத்தல் என்பவற்றை எதிர்த்துப் போராடுவதில் இலங்கையின் திறன்களை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது அமெரிக்க-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் அதே வேளையில் நாட்டின் கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகளை கணிசமாக மேம்படுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, 19 மில்லியன் டொலர் அமெரிக்க அரசாங்கத்தின் மானியத்தில் விமானம் மற்றும் ஆதரவு சேவைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதோடு, இவை அனைத்தும் இலங்கை விமானப்படைக்கு எந்த கட்டணமும் இன்றி வழங்கப்படுகின்றன.

Beechcraft King Air 360ER ஆனது இலங்கையின் கடற்பரப்பில் ரோந்து மற்றும் கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறனை அதிகரிக்க அதிநவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, இலங்கை விமானப்படை வீரர்கள் விமானத்தை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் முழுமையாக ஆயத்தமாக இருப்பதை உறுதி செய்வதற்காக மூன்று மாத பயிற்சி திட்டத்தை அமெரிக்க அரசு ஊழியர்கள் நடத்துவார்கள்.

இந்த விமானம் திருகோணமலை சீனக்குடாவில் உள்ள கடல்சார் ரோந்துப் படை 3 இல் இணைவதற்கு முன்னர் இரத்மலானை விமானப்படை தளத்தில் மேலதிக பயிற்சி மற்றும் ஒருங்கிணைப்புக்கு உட்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
9 18
இலங்கைசெய்திகள்

2029 இல் சிறையில் அடைக்கப்படவுள்ள அநுரவின் 159 எம்.பிக்கள் : கம்மன்பில சீற்றம்

பிவிதுரு ஹெல உருமய (Pivithuru Hela Urumaya) கட்சியின் தலைவரும் வழக்கறிஞருமான உதய கம்மன்பில அவர்கள்,...

8 19
இலங்கைசெய்திகள்

யாழ். கடற்பகுதிகளில் அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு.. தீவிர கண்காணிப்பில் புலனாய்வாளர்கள்

யாழ்ப்பாணம் – குடாநாட்டின் கடல் பகுதியில் அதிகமாக கடற்படை கண்காணிப்பும் ரோந்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுபாப்பு...

7 19
இலங்கைசெய்திகள்

அநுர அரசின் அதிரடி : பலர் கலக்கத்தில்

சட்டவிரோத சொத்துக்குவிப்பு தொடர்பில் விசேட விசாரணை பிரிவு இலங்கையில் சட்டவிரோதமான முறையில் சொத்துக் குவிப்புக்கள் தொடர்பில்...

6 19
இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஒரே நாளில் ஆயிரக்கணக்கானோர் கைது!

இலங்கையில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 4 ஆயிரத்து 631 பேர்...