24 66c95ca6c1d88
இலங்கை

இலங்கையில் தொடருந்து பயணச்சீட்டுக்களுக்கான புதிய இணையத்தளம் அறிமுகம்

Share

இலங்கையில் தொடருந்து பயணச்சீட்டுக்களுக்கான புதிய இணையத்தளம் அறிமுகம்

இணைய வழி ஊடாக தொடருந்து பயணச்சீட்டுக்களை முன்பதிவு செய்வதற்கான புதிய இணையத்தளமொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

www.pravesha.lk என்ற புதிய இணையத்தளமே இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வரிசையில் காத்திருக்காமல் www.pravesha.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக டிஜிட்டல் தொடருந்து பயணச்சீட்டுக்களை இணையவழி ஊடாக கொள்வனவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தொடருந்தில் பயணிக்கும் இரண்டு தொடருந்து நிலையங்களுக்கு இடையே பயணிக்கத் தேவையான 2 மற்றும் 3ம் வகுப்பு பயணச்சீட்டுகளை வங்கிகள் வழங்கும் டெபிட் அல்லது கிரெடிட் வங்கி அட்டைகளை பயன்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.

பணம் செலுத்திய பிறகு, டிக்கெட்டின் QR குறியீடு பணம் செலுத்துபவரின் கையடக்கத் தொலைபேசிக்கு குறுந்தகவல் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

சம்பந்தப்பட்ட தொடருந்து நிலையத்தில் QR குறியீட்டை சரிபார்த்து, பயணச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பயண நாளில் மாத்திரம் தொடருந்தில் பயணம் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

பயணத்தை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ள பயணத் திகதிக்கு ஏழு நாட்களுக்கு முன்னதாகவே இந்த இணையதளத்தின் மூலம் டிஜிட்டல் பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...

செய்திகள்இலங்கைபிராந்தியம்

1990 ஆம்புலன்ஸ் சேவையின் புதிய அலுவலகம் திறப்பு!

இலங்கையின் இலவச அவசர ஆம்புலன்ஸ் சேவையான ‘1990 சுவசெரிய’ (1990 Suwa Seriya) திட்டத்தின் புதிய...