ஜனாதிபதி வேட்பாளர்கள் வெளியிடும் அறிக்கைகள்: கவனம் செலுத்தியுள்ள ஐஎம்எப்
இலங்கை அரசாங்கத்துடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்தல் மேடைகளில் வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் (IMF) கவனம் செலுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் (Peter Breuer) தலைமையில், இலங்கையை கண்காணிக்கும் கண்காணிப்புக் குழுவொன்று இந்த நாட்களில் இலங்கை வந்துள்ளதுடன், சம்பந்தப்பட்ட கண்காணிப்புக் குழு இந்த அறிக்கைகளை ஆராய்ந்து வருகிறது.
இலங்கையுடனான உடன்படிக்கைக்கு சர்வதேச நாணய நிதியம் மனிதாபிமானப் பணியை வழங்கும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் கருத்துப்படி, சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடனான ஒப்பந்தத்தை மாற்றினால், அதன் நான்காவது தவணையை நாட்டுக்கு பெற்றுக்கொடுக்க இன்னும் ஒரு வருடம் ஆகும்.
இந்த வருடம் நவம்பர் மாதம் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவிருந்த நான்காவது தவணை எதிர்வரும் ஜனவரி மாதம் வரை தாமதிக்கப்படும் எனவும் நிதியமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, கடந்த 19 ஆம் திகதி இரவு கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த இந்தக் கண்காணிப்புக் குழு, இந்த வாரத்திற்குள் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- china rjects imf
- china vs imf
- conditions of imf
- gita gopinath imf
- history of imf
- how the imf works
- IMF
- imf activities
- imf and world bank
- imf board
- imf director
- imf explained
- imf kenya
- imf lending
- imf loan
- imf news
- imf president
- imf seun kuti
- imf vs world bank
- imf극복
- mission of imf
- overview of imf
- seun kuti imf
- what is an imf
- what is imf
- what is imf loan
- what is the imf
- what is the role of imf
- who owns imf
- who runs imf