இலங்கை
ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்! உயர்த்தப்படும் ஓய்வூதியத் தொகை
ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்! உயர்த்தப்படும் ஓய்வூதியத் தொகை
ஓய்வுபெற்ற அரச ஊழியர்களின் ஓய்வூதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் வகையில், அவர்களின் ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் 2500 ரூபாவால் உயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரச சேவையில் நிலவும் ஓய்வூதிய முரண்பாடுகளை நீக்கும் பொருட்டு, நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.
இதற்கமைவாக, ஓய்வூதியத் தொகையை உயர்த்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், 83,000 அரச ஓய்வூதியர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்கு இயலுமை கிட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசால் அடிக்கடி மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பளத் திருத்தங்களாலும், அமைச்சரவையால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கொள்கை ரீதியான தீர்மானங்களாலும், ஒருசில ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளன.
இதன்படி, 2016.01.01 ஆம் திகதி தொடக்கம் 2020.01.01 வரைக்குமான ஓய்வூதியம் பெறுகின்ற அரச உத்தியோகத்தர்களுக்கு அநீதிகள் இடம்பெற்றுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளமைக்கு அமைவாக இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.