24 66adbcd458bfb
இலங்கைசெய்திகள்

தேர்தல் பாதுகாப்பை பலப்படுத்த விசேட வேலைத்திட்டம்: எச்சரிக்கை விடுத்துள்ள ஆணைக்குழு

Share

கடந்த தேர்தல்களில் தேர்தல் வன்முறைகள் இடம்பெற்ற இடங்கள் கண்டறியப்பட்டு பாதுகாப்பை பலப்படுத்த விசேட வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான இருபதுக்கும் மேற்பட்ட இடங்கள் கண்டறியப்பட்டு அறிக்கை பெறப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வாக்களிப்பு நிலையத்திலும் சட்ட விரோதமான செயற்பாடுகள் இடம்பெற்றால் அந்த வாக்களிப்பு நிலையத்தை இரத்துச் செய்யவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வரலாற்றில் இவ்வாறான பிரகடனங்கள் இரத்துச் செய்யப்பட்ட பல சந்தர்ப்பங்கள் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 14 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, ரணில் விக்ரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ஏ. எஸ். பி. லியனகே, சஜித் பிரேமதாச, பீ. டபிள்யூ. எஸ். கே. பண்டாரநாயக்க, விஜயதாச ராஜபக்ச, கே.கே. பியதாச, சிறிதுங்க ஜயசூரிய, அஜந்த டி சொய்சா, கே. ஆனந்த குலரத்ன, சரத் மனமேந்திர, பத்தரமுல்லை சீலரதன தேரர் மற்றும் அக்மீமன தயாரத்ன தேரர் ஆகியோர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
image 870x 696c94f879728
செய்திகள்உலகம்

கிரீன்லாந்து விவகாரம்: ட்ரம்ப்பின் முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது – போர்க்கொடி தூக்கும் ஐரோப்பியத் தலைவர்கள்!

கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் முயற்சியில், அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் எட்டு ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்க...

MediaFile 10
செய்திகள்அரசியல்இலங்கை

எம்.பி.க்களின் ஓய்வூதிய ரத்து சட்டமூலத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்காக அரசாங்கத்தால் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற...

IMG 1275
செய்திகள்இலங்கை

உயர்தரப் பரீட்சை நடைபெறும் போது அரசியல் அதிரடி: தம்புத்தேகமவில் மாணவர்களுக்குப் பெரும் இடையூறு!

தம்புத்தேகம நகரில் நேற்று (17) நடைபெற்ற சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அரசியல் கூட்டத்தினால் ஏற்பட்ட...

198399 yjkrdilbjr 1707748418
செய்திகள்இலங்கை

ரணில் விக்கிரமசிங்க மீதான நிதி மோசடி வழக்கு: மன்றாடியார் நாயகத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லண்டன் சென்றபோது அரச நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாகக் கூறப்படும்...