16
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளை எரிப்பது நியாயமானது: நாமல் தெரிவிப்பு

Share

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளை எரிப்பது நியாயமானது: நாமல் தெரிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களை தாக்கி அவர்களின் வீடுகளை எரிப்பது நியாயமானது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கட்சி என்ற ரீதியில் தாம் வலுவாக இருப்பதாகவும், இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி வகித்த போதும் சிலர் சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜபக்சக்கள் காரணமாக தமிழ், முஸ்லிம் கட்சிகள் ஜனாதிபதிக்கு உதவுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தற்பொழுது ஜனாதிபதி, ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேசி தமிழ் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ரவூப் ஹக்கீம் மற்றும் ரிசாட் பதியூதீன் போன்றோருக்கு பேசி உதவி பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

மொட்டு கட்சியின் சிங்கள பௌத்த வாக்கு அடிப்படையினால் தமிழ் முஸ்லிம் தரப்புக்கள் ஜனாதிபதியுடன் இணையவில்லை என குற்றம் சுமத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

தற்பொழுது அனைத்து தரப்பினருக்கும் பேசி அவர்களது ஆதரவினை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எண்ணிக்கை விளையாட்டில் ஈடுபட எம்மாலும் முடியும் எனவும் எனினும் அவ்வாறு செய்து அவர்களின் நிலைமைக்கு கீழே இறங்க நாம் விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலின் போது மக்கள் யாருடன் இருக்கின்றார்கள் என்பது தெரியவரும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் தொடர்பில் மக்களின் நிலைப்பாட்டை சில அரசியல்வாதிகள் உறுதிப்படுத்துகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் அரசியல்வாதிகளை தாக்கி வீடுகளை எரிப்பது நியாயமானது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
30 3
செய்திகள்உலகம்

ஈரான் மீது அதிரடித் தாக்குதல்: பென்டகனின் உச்சகட்ட எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை முன்னெப்போதும்...

29 3
செய்திகள்உலகம்

ஈராக் வான்வெளியைப் போர்க்களமாக மாற்ற வேண்டாம்: அமெரிக்க வெளியுறவு அமைச்சரிடம் பிரதமர் அல்-சூடானி வலியுறுத்தல்!

மேற்காசிய பிராந்தியத்தில் போர்ச் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சூடானி,...

28 3
உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: 50.7 கோடி டொலர் வருவாய் ஈட்டப்பட்டது!

பாகிஸ்தானில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம் இன்று (மார்ச் 10, 2026) இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக...

27 3
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் – பயிற்சியில் ஈடுபட்ட தோனி!

ஐபிஎல் 2026 தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி தனது...