24 66937e3d30ff1
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி சஜித் தலைமையில் புதிய கூட்டணி

Share

ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி சஜித் தலைமையில் புதிய கூட்டணி

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான அறிவிப்பு ஆகஸ்ட் 1ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்பட்டு, பரந்துப்பட்ட அரசியல் கூட்டணி ஒன்று அமைக்கப்படவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், ”நாட்டைச் சூறையாடிய குழுவுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்க மாட்டார்கள்.

தற்பெருமை மட்டுமே கொண்ட, அனுபவமில்லாத கூட்டத்திற்கான அரசாங்கமாக புதிய அரசாங்கம் அமையாது என்பதை மக்கள் வாக்குகளின் மூலம் வெளிப்படுத்துவார்கள்.

கொழும்பில் பெரும் மாநாட்டை நடத்தி இந்த அறிவிப்பை வெளியிட ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருகின்றது.

மேலும், சஜித் பிரேமதாச 1994ஆம் ஆண்டுக்கு பிறகு மக்களுக்கு சேவை செய்யவந்த சிறந்த தலைவர். அவர் தனது குடும்பத்தை காப்பாற்றவோ அல்லது தனது நண்பர்களுக்கு சலுகைகளை வழங்கவோ பணியாற்ற மாட்டார்.” என்றார்.

இந்நிலையில் உத்தேச ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சக்தியை தலைமைத்துவமாக கொண்ட அரசியல் கூட்டணி தொடர்பில் கொழும்பில் பெரும் மாநாட்டை நடத்தி அறிவிப்பு விடுக்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...