13 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனியாக தவித்த வெளிநாட்டவர்

Share

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனியாக தவித்த வெளிநாட்டவர்

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் தனியாக தவித்த சீன பிரஜை ஒருவருக்கு விமான நிலைய சுற்றுலா பொலிஸ் நிலைய அதிகாரிகள் உதவியுள்ளனர்.

கடந்த 28ஆம் திகதி 65 வயதான சீன பிரஜை ஒருவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். எனினும் அவரின் பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் சீனாவுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார்.

குறித்த நபர் சீனாவுக்கு செல்வதற்கான விமானப் பயணச்சீட்டு மற்றும் உணவு இன்றி கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்கியிருந்தமை தெரிய வந்துள்ளது.

இது குறித்து தகவலறிந்த விமான நிலைய சுற்றுலா பொலிஸ் நிலையத்தின் அதிகாரி அடுத்தகட்ட நடவடிக்களை மேற்கொண்டனர்.

முதற்கட்டமாக குறித்த சுற்றுலா பயணிக்கு தேவையான உணவு மற்றும் பானங்களை வழங்கியுள்ளனர்.

அத்துடன் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானகமவின் நேரடி தலையீட்டின் மூலம், சீனத் தூதரகத்தின் ஊடாக அவருக்கு பயணச் சீட்டு அனுப்பி வைக்கப்பட்டதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து குறித்த சீனப் பிரஜை நேற்று முன்தினம் யுஎல்-884 விமானம் சீனாவுக்கு சென்றுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 19 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வங்கக்கடலில் குறைந்த அழுத்தப் பிரதேசம் நீடிப்பு: மீனவர்களுக்கு ஆம்பர் எச்சரிக்கை! – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கைக்குத் தென்கிழக்காக, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம் (Low Pressure...

image 1200x800 18 2
விளையாட்டுசெய்திகள்

இலங்கை அணிக்கு பேரிடி! – மதீஷ பத்திரண உலகக்கோப்பையிலிருந்து விலகல்; மதுசங்கவுக்கு ஐசிசி அனுமதி!

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து...

image 1200x800 17 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அக்குரேகொட இரட்டைக் கொலை: கைதான சகோதரர்களுக்கு மார்ச் 4 வரை விளக்கமறியல்! – டுபாயிலிருந்து இயங்கிய மாபியா அம்பலம்!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொலை செய்த சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை வழங்கிய...

image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...