இலங்கை
யாழில் தொடரும் உணவு சுகாதார சீர்கேடு: இரு வெதுப்பகங்களுக்கு தண்ட பணம் அறிவிப்பு
யாழில் தொடரும் உணவு சுகாதார சீர்கேடு: இரு வெதுப்பகங்களுக்கு தண்ட பணம் அறிவிப்பு
யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்த இரண்டு வெதுப்பகங்களுக்கு160,000/= தண்ட பணம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், கடந்த மாதம் 12ஆம் திகதி நல்லூர் சகாதார வைத்திய அதிகாரி, மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் யாழ் (Jaffna) கொக்குவில் (Kokkuvil) பகுதியில் அமைந்துள்ள வெதுப்பகங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இதன்போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 02 வெதுப்பகங்கள் இனங்காணப்பட்டு குறித்த வெதுப்பகங்களுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் வழக்குகள் கடந்த மாதம் 24ஆம் திகதி அன்று தாக்கல் செய்யப்பட்டன.
இதனடிப்படையில், வழக்கினை விசாரித்த நீதவான் ஒரு வெதுப்பகத்தினை மூடி சீல் வைக்குமாறும், மற்றைய வெதுப்பகத்தினை விரைந்து திருத்தி அமைக்குமாறும் கட்டளை வழங்கியுள்ளார்.
இந்தநிலையில், குறித்த வெதுப்பகமானது பா. சஞ்சீவனால் சீல் வைத்து மூடப்பட்டதுடன் வழக்கினை இன்றைய தினத்திற்கு (03) ஒத்திவைக்கப்பட்டது.
அந்தவகையில், இன்று வழக்குகள் மீள விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது நீதவான் செ. லெனின்குமார் இரு வெதுப்பக உரிமையாளர்களுக்கும் தலா 80,000 ரூபாய் தண்டம் அறவிட்டதுடன், திருத்த வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகரால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டமையால் வெதுப்பகங்களை தொடர்ந்து இயங்க அனுமதி வழங்கியுள்ளார்.