இலங்கை
கனடா மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசி
கனடா மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசி
பிரித்தானிய மன்னரின் தங்கையான இளவரசி ஆன், குதிரை ஒன்றினால் தாக்கப்பட்டதால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விடயம் குறித்து பெரும்பாலானோர் அறிந்திருக்கலாம்.
காயமடைந்ததைத் தொடர்ந்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி, இளவரசி ஆன் ஓய்வெடுக்கவேண்டியிருப்பதால், தான் கலந்துகொள்ளவிருந்த சில நிகழ்ச்சிகளை அவர் தவிர்க்கவேண்டியதாயிற்று.
இளவரசி ஆன் கலந்துகொள்ளவேண்டிய நிகழ்ச்சிகளில் ஒன்று, கனடாவில் நடைபெறவிருந்த, தேசிய போர் நினைவு நாள் நிகழ்ச்சியாகும். போரின்போது வட பிரான்சில் உயிரிழந்த கனேடிய வீரர் ஒருவரின் உடலை கனடாவுக்குக் கொண்டுவரும் அந்த நிகழ்ச்சியில் இளவரசி ஆன் கலந்துகொள்ளவேண்டியிருந்தது.
இளவரசி காயமடைந்ததால் கனடா செல்ல முடியாத நிலைமை ஏற்படவே, அவர் சார்பில், அவர் கனடா மக்களுக்கு அனுப்பிய செய்தியை, கவர்னர் ஜெனரல் வாசித்தார்.
அந்த செய்தியில், 2016ஆம் ஆண்டு தான் கனடாவில் தேசிய போர் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதை நினவுகூர்ந்துள்ள இளவரசி ஆன், இம்முறை தன்னால் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாததற்காக வருத்தம் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
பிரித்தானிய மன்னரான சார்லஸ்தான், கனடா உட்பட 14 நாடுகளின் மன்னர் என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.