8 11
இலங்கைசெய்திகள்

ஹிருணிகாவிற்கு வழங்கப்பட்டது கைதி இலக்கம்

Share

ஹிருணிகாவிற்கு வழங்கப்பட்டது கைதி இலக்கம்

கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர(Hirunika Premachandra), தற்போது வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார்.

தற்போது பெண் கைதியின் சீருடையை அணிந்துள்ள அவர், பெயருக்கு பதிலாக கைதி எண் வழங்கப்பட்டுள்ளது. ஹிருணிகா இதுவரையில் விசேட கோரிக்கையொன்றை முன்வைக்கவில்லை எனவும் எனவே அவரை விசேட விடுதிக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை எனவும் சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

எனினும், உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவரது வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர். வரும் வாரத்தின் முதல் சில நாட்களுக்குள் பிணை மனு தாக்கல் செய்து அவர் பிணை பெற முடியும் என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி, தெமட்டகொட பிரதேசத்தில் விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றிய அமில பிரியங்க என்ற இளைஞனை கறுப்பு டிஃபென்டர் வாகனத்தில் கடத்திச் சென்று சித்திரவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...