இலங்கை
மிக மோசமான போக்குவரத்து நெரிசல் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த நகரம்
மிக மோசமான போக்குவரத்து நெரிசல் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த நகரம்
அமெரிக்காவின் நியூயார்க்(New York) நகரமே உலகிலேயே மிக மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட பகுதியாக அறியப்படுவதுடன் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாகவும் இந்த நகரம் அதிகரித்த போக்குவரத்து நெரிசல் பட்டியலில் முதலாவது இடத்தை பிடித்துள்ளது.
உலகிலேயே மிக மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட பகுதியாக அறியப்படும் நியூயார்க் நகரத்தில், போக்குவரத்து நெரிசலில் காத்திருக்கும் நேரத்தில் பல பில்லியன் டோலர் தொகையை மக்கள் இழப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி,
சராசரியாக ஒரு சாரதி கடந்த ஆண்டில் நியூயார்க் நகர போக்குவரத்து நெரிசலில் சிக்கி 101 மணி நேரம் தாமதித்ததாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு போக்குவரத்து நெரிசலில் மக்கள் சிக்கிக் கொண்டு காத்திருப்பதால், பொருளாதாரத்தில் 9.1 பில்லியன் டொலர் இழப்பை சந்தித்துள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், போக்குவரத்து நெரிசல் பட்டியலில் 2 ஆவது இடத்தில் மெக்சிகோ(Mexico) , 3 ஆவது இடத்தில் லண்டன்(London), 4 ஆவது இடத்தில் பாரிஸ்(Paris) மற்றும் 5 ஆவது இடத்தில் சிகாகோ இடம்பிடித்துள்ளன.
இதேவேளை, போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்குவதால் 2023ஆம் ஆண்டில் 70.4 பில்லியன் டொலர் தொகையை ஒட்டுமொத்தமாக அமெரிக்கா இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், சராசரியாக 42 மணி நேரம் சாரதிகள் போக்குவரத்தில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.