13 5
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளம் பெண் கைது

Share

இங்கிலாந்துக்கு இரகசியமாக தப்பிச்செல்ல முயன்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலையை சேர்ந்த இளம் பெண் மற்றுமொரு நபருடன் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி நாட்டிலிருந்து தப்பிச்செல்ல முயன்ற போதே விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு (06/15) 08.25 மணியளவில் தோஹா நோக்கிச் செல்வதற்காக கட்டார் எயார்வேஸ் விமானமான KR-655 இல் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது அனைத்து விமான அனுமதி நடைமுறைகளையும் முடித்துவிட்டு குடிவரவு சேவை மையத்தில் கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களை குறித்த இளம் பெண் சமர்ப்பித்துள்ளார்.

இதன்போது கடவுச்சீட்டில் உள்ள புகைப்படத்தில் வித்தியாசம் காணப்பட்டமையினால் தலைமை குடிவரவு அதிகாரியிடம் விசாரணைக்கு அனுப்பி அனைத்து ஆவணங்களும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் குறித்த பெண்ணின் கடவுச்சீட்டு போலியானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது இங்கிலாந்து கடவுச்சீட்டு வைத்திருக்கும் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபரும் பெண்ணுடன் விமான நிலையத்திற்கு வருகைத்தந்திருந்த நிலையில், அவர் குறித்த பெண்ணை இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்வதற்கு தரகராகப் பணியாற்றியவர் எனவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இருவரும் குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
26 695b58a150149
செய்திகள்அரசியல்இலங்கை

அரசாங்கத்தின் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன: தற்போதைய ஆட்சி குறித்து மகிந்த ராஜபக்ச சாடல்!

தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் பல விடயங்களில் முயற்சி செய்தாலும், அவை அனைத்தும் தோல்வியிலேயே...

26 695b5ca406bfd
செய்திகள்இலங்கை

விவசாய அமைச்சுக் கட்டிட விவகாரம்: லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ரிஷாட் பதியுதீன் முன்னிலை!

ராஜகிரியவில் விவசாய அமைச்சிற்காகக் கட்டிடம் ஒன்றை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்காக,...

26 695b3fa4f317d
செய்திகள்இலங்கை

EPF செலுத்தாத நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை: 3,498 கோடி ரூபாய் நிலுவையை வசூலிக்க அரசு அதிரடி!

இலங்கையில் ஊழியர் சேமலாப நிதி (EPF) பங்களிப்புகளைச் சரியாகச் செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத்...

26 695b472ef2261
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த புலம்பெயர் தமிழர் நிமோனியாவால் உயிரிழப்பு: சோகத்தில் வட்டுக்கோட்டை!

கனடாவிலிருந்து விடுமுறைக்காகத் தனது சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த 42 வயதுடைய நபர் ஒருவர்,...