12 4
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் குவியும் முறைப்பாடுகள்

Share

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் குவியும் முறைப்பாடுகள்

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த பாரிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மாத்தறை பிரதேசத்தில் நிறுவனமொன்றை நிறுவி மோசடியான முறையில் வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களிடமிருந்து 130 இலட்சம் ரூபாய்க்கு மேல் பணம் வசூலித்து மோசடி செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இதனடிப்படையில் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்திற்கு 53 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

குறித்த நிறுவனம் வேலைவாய்ப்பு பணியகத்தில் முன்னர் பதிவு செய்யப்பட்டிருந்ததுடன், அதன் வேலைவாய்ப்பு அனுமதிப்பத்திரம் பெப்ரவரி 29ஆம் திகதியுடன் காலாவதியாகியுள்ளது.

இதற்கமைய, கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, அவரை தலா 5 இலட்சம் ரூபா 2 சரீரப் பிணைகளில் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அவருக்கு வெளிநாடு செல்வதற்கும் தடைவிதித்து நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

17
இலங்கைசெய்திகள்

ஹலோ மச்சான் ட்ரம்ப்! யாருக்காவது முடியுமா.. இலங்கையில் இருந்து கேள்வி

தொலைபேசி அழைப்பை எடுத்து ஹலோ மச்சான் ட்ரம்ப் என்று யாருக்காவது கதைக்க முடியுமா, அப்படி யாராது...