இலங்கை
வாக்காளர்கள் மத்தியில் எச்சரிக்கையான கருத்துக்களை பகிரும் ரணில்
வாக்காளர்கள் மத்தியில் எச்சரிக்கையான கருத்துக்களை பகிரும் ரணில்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல், தனிநபர் வெற்றி தோல்விகளை விட தேசிய வெற்றியை மையமாகக் கொண்டு நாட்டின் எதிர்காலத்திற்கு முக்கியமானதாக அமையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Rsnil Wickremesinghe) வலியுறுத்தியுள்ளார்.
பத்தரமுல்லையில் நடைபெற்ற கொள்கைச் சீர்திருத்தக் கலந்துரையாடலில், பொருளாதார சீர்திருத்தத் துறை கண்காணிப்புக் குழுவின் இளைஞர் பிரதிநிதிகள் மத்தியிலேயே விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் தேர்தல் தனிப்பட்ட வெற்றி அல்லது தோல்விக்கானது அல்ல, அது இலங்கை நாட்டின் வெற்றி அல்லது தோல்வியைத் தீர்மானிப்பதாகும்.
நீண்ட கால செழிப்பை உறுதி செய்வதற்காக வலுவான பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி இந்தக் கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை அடு;த்து வரும் ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் தமது வெற்றியை உறுதிப்படுத்திய பின்னரே ரணில் விக்ரமசிங்க, போட்டியிடும் விருப்பத்தை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் அவர் தமது விருப்பத்தை வெளியிட வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச தரப்பு கோரிக்கை விடுத்திருந்தது.
எனினும், நாமல் ராஜபக்சவின் பிந்திய கருத்துக்களின்படி அந்த காலக்கெடு ஜூலை வரையில் பிற்போடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.