24 665d14e79bcb1 1
இலங்கைசெய்திகள்

நாட்டு மக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

Share

நாட்டு மக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த மூன்று வாரங்களாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், சீரற்ற காலநிலையால் ஏற்படும் அவசர நிலமைகள் தொடர்பில் அறிவிக்க மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 117 என்ற அவசர தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த இலக்கம் 24 மணித்தியாலங்களும் செயற்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள அவசர நிலைமைகள் குறித்து அறிவிப்பதற்காக காவல்துறையினரால் ஆரம்பிக்கப்பட்ட விசேட செயற்பாட்டு அறையின் தொலைபேசி இலக்கங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

நேற்று (02) மாலை 06:00 மணி முதல் காவல்துறை தலைமையகத்தில் 24 மணித்தியாலங்களும் செயற்படுத்தப்படும் விசேட பிரிவை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த விசேட செயற்பாட்டு அறை காவல்துறை தலைமையகத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் இயங்குவதுடன் அவசரகால நிலைகள் மற்றும் தேவையான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த பிரிவு நிறுவப்பட்டுள்ளது.

இதன்படி, 011 2 42 18 20 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக விசேட செயற்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ள முடியும் என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், 011 2 43 92 12, 011 20 130 36 அல்லது 011 20 130 39 ஆகிய எண்களுக்கு அழைப்பதன் மூலம் தகவல்களை வழங்க முடியும்.

அத்துடன் disaster.ops@police.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் தகவல்களை வழங்க முடியும் என காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...